புதிய ரக நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


புதிய ரக நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
x

கருப்பட்டி கிராமத்தில் புதிய ரக நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு உதவி இயக்குனர் பாண்டி தலைமை தாங்கினார். டாக்டர் சுப்பிரமணியன், வேளாண்மை துணை அலுவலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் தங்கையா வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகரன், பாண்டியராஜன், விக்டோரியா, ஷெலஸ் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணாதேவி ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நெல்லில் புதிய ரகங்களை சாகுபடி செய்தல் நெற்பயிருக்கு தேவையான உரங்களை பயிர்களில் நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் முறைகள், பற்றியும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இடுபொருள்கள் பற்றியும் எடுத்துக் கூறி பேசினார்கள். முடிவில் விவசாயி ராமநாதன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story