சாலை விபத்து குறித்து லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு


சாலை விபத்து குறித்து லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
x

சாலை விபத்து குறித்து லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பெரிய நாகலூர் கிராமத்தில் டிப்பர் லாரி டிரைவர்களுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும். மது குடித்து விட்டு லாரியை இயக்க கூடாது. வாகனம் இயக்கும் போது செல்போன் பேசக்கூடாது. அதிவேகமாக செல்ல கூடாது. தார்பாய் போட்டு தான் மணல் ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.


Next Story