உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி


உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி
x

உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவதற்கான உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி உள்ளிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. இந்த செயல் விளக்கத்தில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி கலந்துகொண்டு உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து பேசினார். பயிற்சியில் கலந்துகொண்ட 50 விவசாயிகளுக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் உயிர் எதிர்கொல்லியான சூடோமோனாஸ் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை இளநிலைஆராய்ச்சியாளர்கள் சுரேஷ், தினேஷ்குமார், புஷ்பராஜ் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் குகன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story