சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் வேலம்மாள் போதி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சாரண-சாரணியர் இயக்க தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தன், கவுரவ விருந்தினராக திருச்சி மண்டல சாரண-சாரணியர் இயக்க செயலாளர் மில்டன், இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமையாசிரியர் சஹானா ராஜ்குமார் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சாரண-சாரணியர் இயக்க மாணவர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் சாலையில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தின் போது, மாணவர்கள் சாலை விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பள்ளி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகனங்களின் முகப்பில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.