சமரச மையம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
சமரச மையம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாவட்ட சமரச மையம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் நடைபெற்றது.
ஊர்வலத்தை வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தொடங்கி வைத்தார். ஊர்வலம் சத்துவாச்சாரி கோர்ட்டில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நீதிபதிகள், வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story