போதைப்பொருட்கள்- மதுவினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருட்கள்- மதுவினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருட்கள்- மதுவினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருட்கள்-மதுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் செந்தில்நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட கோட்ட கலால் துறை அலுவலர் கண்ணா கருப்பையா, ஆலங்குடி தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் பழனிச்சாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மது அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நாட்டுப்புற பாடல், கரகாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலமானது ஆலங்குடி பஸ் நிறுத்தம், பழைய நீதிமன்றச்சாலை, காமராஜர் சிலை, அரசமரம் பஸ் நிறுத்தம் மற்றும் பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மது மற்றும் போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story