கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் மற்றும் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்ட மாணவிகள் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் அண்ணா சிலை, நான்கு ரோடு, கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையம் சென்று முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், பிரவீன் குமார், விக்ரமன், விமல்ராஜ், முத்து பிரபாகரன் மற்றும் நகர சுகாதார செவிலியர்கள், அன்னை தெரசா செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.