விழிப்புணர்வு வார விழா


விழிப்புணர்வு வார விழா
x

மாதனூர் பள்ளியில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, மாணவர்கள் உடல்நலம் மற்றும் மனநலம் காக்க சிறப்பு விழிப்புணர்வு வார விழா வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ அலுவலர் செந்தில்குமார், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருநாவுக்கரசு, தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் குமாரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலில், சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் குமார், தலைமை ஆசிரியர் வேலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story