தூய்மை நகரம் குறித்த விழிப்புணர்வு போட்டி
தூய்மை நகரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி,
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் "எனது குப்பைகள்- எனது பொறுப்பு "எனும் தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். மாணவ -மாணவிகளுக்கு ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் தூய்மை நகரம் பற்றிய வாசகங்கள் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மை பணி மூலம் சுத்தம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகமது ஷேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story