பந்தாரஅள்ளி ஊராட்சியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில் பந்தாரஅள்ளி ஊராட்சியில் உலக மண்வள தின விழா நடந்தது. விழாவுக்கு வட்டார வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் தாம்சன் உலக மண்வள தினம் குறித்தும், மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினார். வேளாண்மை அலுவலர்கள் கனகராஜ், சிவராமன் ஆகியோர் மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தொழில் நுட்ப மேலாளர் ரவி, ரேணுகா, பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story