பட்டுக்கோணம்பட்டியில் கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தாது உப்பின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டுக்கோணம்பட்டி கிராமத்தில் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி உதவி கால்நடை மருத்துவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, தாது உப்பின் பயன்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தாது உப்புகள் வழங்கப்பட்டன. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள சண்முகம், மனோஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story