ரெயில்வே போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ரெயில்வே போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பூர்
உடுமலை
உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பழனி ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தல்படி போலீஸ்காரர் ரகு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம், தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ெரயிலில் ஏறும்போதும், இறங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனே போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். ரெயில்களில், பட்டாசு மற்றும் எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story