புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

கலால் வரித்துறை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

திருவாரூர்

திருவாரூர்;

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழாயொட்டி ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறை திருச்சி ஆணையரகம் சார்பில் புகையிலை எதிர்ப்பு தினம் மற்றும் ஜி.எஸ்.டி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. திருவாரூர் கலால் வரித்துறை அலுவலகம் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை ஜி.எஸ்.டி. துணை ஆணையர் சுரேஷ் குமார் மீனா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது அவர், புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும். மேலும் மக்கள் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என கூறினாா். ஊர்வலத்தில் கண்காணிப்பாளர்கள் சுந்தரகணபதி, முருகேசன், வீரமணி, நிர்மலா, நிர்வாக அலுவலர் கணேசன், ஆய்வாளர் பானு பிரகாஷ் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story