ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில் அய்யனார் கோவில் தேரோட்டம்


ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில் அய்யனார் கோவில் தேரோட்டம்
x

ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில் அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில் பூரணி புஷ்பகலாம்பாள் சமேத வேதாந்த வேதியன் வினைதீர்த்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அய்யனார் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணி அளவில் மங்களஇசை, வேதபாராயணத்துடன் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின் மதியம் 4 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக சாமி பச்சை பட்டுஉடுத்தி ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதன் பின் தேரோட்டம் தொடங்கியது. பின்னர் இரவு 8 மணி அளவில் தேர்நிலையை வந்தடைந்தது. இதில் ஆலம்பாடிமேட்டூர், விரகாலூர், திண்ணகுளம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், ஆலம்பாக்கம், கோவாண்டகுறிச்சி, செம்பியக்குடி, குலமாணிக்கம், விளாகம், இலந்தகுடம் மற்றும் திண்டுக்கல், தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட குடிபாட்டுமக்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை ஆடு, கோழி உள்ளிட்ட பலி பூஜைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கோவில் காரியஸ்தர்கள், குடிபாட்டு இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story