அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா
அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கள்ளழகர் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து குதிரை சிலைகளை விநாயகர் கோவிலில் இருந்து அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒருபிரிவினர் சிலரை நீக்கி விட்டு விழா நடத்துவதாகவும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை ஆணை பெற்றுள்ளதால் குதிரை சிலை எடுக்க கூடாது என்று ஆவுடையார்கோவில் தாசில்தார் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இருதரப்பினரும் மேளதாளம் இல்லாமல் சிலைகளை எடுத்து செல்ல ஒப்புக்கொண்டனர். அதன்படி இருதரப்பினரும் ஒற்றுமையோடு அய்யனார் கோவிலுக்கு சிலைகளை கொண்டு சென்று வழிபட்டனர்.
Related Tags :
Next Story