திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்
திண்டுக்கல்லில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் விரதம் முடித்து மண்டல பூஜைக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் நேற்று அதிகாலையில் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதையடுத்து அலங்கரிக்கப்பட்ட மின்தேரில் அய்யப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசமுடன் பூக்குழி இறங்கி அய்யப்பனை வழிபட்டனர். இதில் பக்தர் ஒருவர் தனது மகனை தோளில் சுமந்தபடி பூக்குழி இறங்கி வழிபாடு செய்தார்.
Related Tags :
Next Story