அய்யப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் அய்யப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் டாக்டர் ரவி தலைமை தாங்கினார். புதுச்சேரி தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் செல்வம், நந்தகோபால், சுரேஷ், தேனி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். சரக செயலாளர் சுவாமிநாதன், திருவண்ணாமலை தேவேந்திரன், செங்கல்பட்டு சரவணன், விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளராக செஞ்சி காமராஜ், மாவட்ட அமைப்பு செயலாளராக ஆனந்தகுமார், கவுரவ தலைவராக விழுப்புரம் குப்புசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விழுப்புரம் வேலவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story