பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம்


பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம்
x

காரைக்குடியில் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், விவசாயிகளின் குறைகளை தீர்க்க கோரியும், பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்க வலியுறுத்தியும், கல்விக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் நிதி உதவி, மதுக்கடைகளை மூடுவோம், ஓய்வூதியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசைக்கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டியன் வரவேற்றார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், சிதம்பரம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை, மாவட்ட செயலாளர்கள் மார்த்தாண்டன், முருகேசன், மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கவிதா, மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயமணி, மாவட்ட செயலாளர் மீனாதேவி, மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி. நாராயணன், சங்கர், சுப்பிரமணியன், புவனேஸ்வரி, நகர செயலாளர்கள் மலைக்குமார், நகர துணை தலைவர் ஜோதி சண்முகம் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூப்பானடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story