பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். கடலாடி கிழக்கு ஒன்றிய மண்டல தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பா.ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், பிரியா, பட்டியலின மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், சமூக ஊடக பிரிவு செயலாளர் இருளப்பன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்து அப்பகுதியில் தனியார் சோலார் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சோலார் மின் நிலையத்திற்காக பனை மரங்களை வெட்டி அளிக்கும் தனியார் சோலார் நிறுவனத்தை உடனே தடை செய்ய வேண்டும். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட சிக்கல் யூனியனை உடனே நடைமுறைபடுத்த வேண்டும். கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கருப்பசாமி, ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம் ஒன்றிய துணைத்தலைவர்கள் சதாசிவம், குமரவேல், முருகேசன், ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், வீரபத்திரன் நீலாவதி உள்ளிட்ட பா.ஜனதாவினர், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story