பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு


பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
x

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பப்ஜி ஆன்லைன் விளையாட்டின்போது, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிக்கொண்டும், தவறாக சித்தரித்தும், அதன் மூலம் சிறுவர்களை, இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றதாக பப்ஜி மதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மதன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், "பப்ஜி மதன் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்றவர்களிடம் கொரோனா நிதி எனக்கூறி ரூ.2.89 கோடியை வசூலித்துள்ளார். இளம்வயது சிறுவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி கூறினார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story