பொன்னம்மாபேட்டையில் பிறந்து 13 நாளில் ஆண் குழந்தை சாவு


பொன்னம்மாபேட்டையில் பிறந்து 13 நாளில் ஆண் குழந்தை சாவு
x

பொன்னம்மாபேட்டையில் பிறந்து 13 நாளில் ஆண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறைபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கல்பனா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. அதன்பிறகு மீண்டும் கர்ப்பமான கல்பனாவுக்கு கடந்த 6-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் குழந்தை மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். சேலத்தில் ஆண் குழந்தை பிறந்து 13 நாட்களில் திடீரென இறந்த சம்பவம் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story