ஆண் குழந்தை திருப்பத்தூர் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைப்பு
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை திருப்பத்தூர் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் சிறப்பு தத்தெடுப்பு மையங்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 25 உள்ளது. இதில் எந்தெந்த மாவட்டத்தில் சிறப்பு தத்தெடுப்பு மையம் இல்லையோ அந்த மாவட்டத்தில் பெறக்கூடிய குழந்தைகள் பக்கத்து மாவட்டத்திற்கு சுழற்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை நாகப்பட்டினம் குழந்தைகள் நலக்குழுவினர் திருப்பத்தூர் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஆண் குழந்தையை திருப்பத்தூரில் செயல்படும் எஸ்.ஆர்.டி.பி.எஸ.் சிறப்பு தத்தெடுப்பு மைய இயக்குனர் தமிழரசியிடம், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, ஆகியோர் உடன் இருந்தனர். இந்த குழந்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தத்து கொடுக்கப்படும்.