மருத்துவமனையில் விட்டு சென்ற பெண் குழந்தை


மருத்துவமனையில் விட்டு சென்ற பெண் குழந்தை
x

ஓசூரில் பிறந்த சில நாட்களில் மருத்துவமனையில் விட்டு சென்ற பெண் குழந்தை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அரசு மருத்துவமனைக்கு, கடந்த 14-ந்தேதி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 16-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பெண், தனக்கு பிறந்த குழந்தையை பிரசவ வார்டில் போட்டுவிட்டு, மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார். மேலும் அவருடன் வந்த பெண்ணும் மாயமானார். இதுகுறித்து, மருத்துவமனை சார்பில், ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறந்த சில நாட்களில் குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்ற இளம்பெண் மற்றும் அவருடன் வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பெண் குழந்தை, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story