கும்பகோணத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு...!
கும்பகோணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்து உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசிப்பவர் ராஜு. இவரது 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கம்பியின் மீது ஏறிய போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அதில் படுகாயம் அடைந்த சிறுமி கோபிகாவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story