முத்துமாலை அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா


முத்துமாலை அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா
x

திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அடுத்துள்ள திருவழுதி நாடார்விளை முத்துமாலை அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா நடந்தது. ஊர் மக்கள் முத்துமாலை அம்மனுக்கு வளையல்கள் அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள் ஊர் பெண்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக தெற்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி செயலாளர் மகேஸ்வரி பிரபாகர் தலைமையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story