குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கடந்த 10-ந் தேதி தொடர் போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த அங்கம்மாள் என்ற பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தினர், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

படகு சவாரி

இதில் தற்காலிக ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.425 என்று இருப்பதை ரூ.500 ஆக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனால் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பணிக்கு திரும்பினர். முன்னதாக தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஊழியர்கள் தற்போது பணிக்கு திரும்பி இருப்பதால், படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இது தவிர செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரமிடுதல் போன்ற வழக்கமான பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்.


Next Story