பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது - அண்ணாமலை கண்டனம்


பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது - அண்ணாமலை கண்டனம்
x
தினத்தந்தி 29 July 2023 9:33 AM IST (Updated: 29 July 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon

பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை,

பிரபல பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

சாமானிய மக்களின் கருத்துகளை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story