படுகர் சங்க கட்டிடத்தின் பூட்டை உடைத்ததாக படுகதேச கட்சி தலைவர் கைது
படுகர் சங்க கட்டிடத்தின் பூட்டை உடைத்ததாக படுகதேச கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஜெகதள கிராமத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசும் போது, படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சை கண்டிக்கும் வகையில் படுகதேச கட்சி தலைவர் மஞ்சை மோகன் ஊட்டியில் உள்ள இளைஞர் படுகர் சங்க கட்டிடத்தில் சமுதாய மக்களிடம் கூட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து அவர் படுகர் சங்க கட்டிடத்திற்கு சென்று உள்ளார். அப்போது கட்டிடம் பூட்டப்படு இருந்தது. இதனால் அவர் அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்க அலுவலக மேலாளர் ஊட்டி நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சை மோகனை செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.