தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில்2,700 டன் அரிசி விழுப்புரம் வந்தது
தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் 2,700 டன் அரிசி விழுப்புரம் வந்தது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
இந்திய உணவுக் கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி தாலுகா கரீம் நகர் பகுதியில் இருந்து நேற்று 2,700 டன் அரிசி சரக்கு ெரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை இந்திய உணவு கழக குடோன் மேலாளர் சதாம் உசேன் மேற்பார்வையில், தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குண்டலப்புலியூரில் உள்ள இந்திய உணவு கழக குடோனில் இருப்பு வைக்க அனுப்பி வைத்தனர். இந்த அரிசி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story