பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்


பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்
x

பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை


மதுரை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் துரைபாண்டியன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் தவமணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் மணிவண்ணன், திருச்சி மாவட்ட தலைவர் இளமான் சேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் மனோகரன், புறநகர் மாவட்ட பொது செயலாளர் ஜெயபால், மாநகர் துணை தலைவர் சுரேஷ் ரெங்கபாபு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மாயாராஜ், நாகராஜன், ராமமூர்த்தி, வீரய்யா, ஆத்தங்கரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது, திருமங்கலம் அருகே தும்பக்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறையால் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், பேரையூர் குடிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறையால் 2016-ல் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து அந்த இடத்தில் குடியேற ஆவண செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story