பேக்கரி ஊழியர் தற்கொலை


பேக்கரி ஊழியர் தற்கொலை
x
சேலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் பாபுஷெரீப் (வயது 46). இவர் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் தங்கியிருந்து பேக்கரி ஒன்றில் 7 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்கு உரிமையாளர் வந்தார்.

பின்னர் அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் மோட்டாரை போடுவதற்காக சென்றார். அப்போது பாபு ஷெரீப் கிணற்றின் மேல் தண்ணீர் இறைப்பதற்காக போடப்பட்டுள்ள இரும்பு கம்பியில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பாபு ஷெரீப்பின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story