நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை- ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
5 கடமைகளில் ஒன்றான தானம் வழங்குதல் (ஈகை) திருநாளை பக்ரீத் பண்டிகையாக முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசல், மார்க்கெட் அருகே உள்ள சின்ன பள்ளிவாசல், காந்தல், பிங்கர் போஸ்ட் உள்பட பல இடங்களில் பள்ளிவாசல்களில் காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்ட ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு தானம் வழங்கினர். மேலும் நண்பர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
தொழுகை
இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெற்றது. கூடலூர் பெரிய மற்றும் சின்ன பள்ளிவாசல்கள், மேல் கூடலூர் ஜும்மா மசூதி ஆகிய இடங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது முன்னோர் நினைவிடங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.