பாலதண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்


பாலதண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்
x

பாலதண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் சந்தைப்பேட்டை வெட்டி கண்மாய் கரையில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதைதொடர்ந்து கிராம தேவதைகள் வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கொண்டு ேகாவிலை வலம் வந்தனர். பின்னர் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது ெதளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வெட்டிவயல் ஆயக்கட்டு தாரர்கள், சந்தைப்பேட்டை ஊரார்கள், கிராமமக்கள், பாதயாத்திரை குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story