பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் பாலாலய பூஜை
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
பாலாலய பூஜை
பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு முன்னோடியாக திருப்பணி வேலைகள் செய்வதற்காக பாலாலய பூஜை 2 நாட்கள் நடந்தது.
மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி ஜான்சி ராணி, உதவிக் கோட்ட பொறியாளர் மோகன் தாஸ் மற்றும் கோவில் ஸ்ரீ காரியம் ஆறுமுக நைனார் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த் முன்னிலையில் நடந்தது. இதில் தந்திரிகள் மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார் ஆகியோர் பூஜைகளை நடத்தினார்கள்.
திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழாவிற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Related Tags :
Next Story