கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் பாலம் கட்டுமான பணி


கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் பாலம் கட்டுமான பணி
x
திருப்பூர்


உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தவுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணி தொடங்கப்பட்டது.ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறவில்லை.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வேறு சாலை வழியாக சுற்றி வந்து மறுபகுதியை அடைய வேண்டிய சூழல் நிலவியது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வந்தது.இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமானது.அதைத் தொடர்ந்து கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் பாலம் கட்டுமான பணி கடந்த சில நாட்களாக மும்ரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்தி பிரசுரித்த 'தினத்தந்தி'க்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


Next Story