பாலாறு பெருவிழா நிறைவு
பாலாறு பெருவிழா நிறைவு
வேலூர்
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் மற்றும் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் 5 நாட்கள் பாலாறு பெருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.
திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலை வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் ஆன்மிக சொற்பொழிவு மாநாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து மாலையில் வேலூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள பாலாற்றங்கரையில் சிறப்பு யாகம் மற்றும் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
பின்னர் பாலாற்றுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி பாலாற்றில் விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்க நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story