பத்திரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
திருக்கடையூர் அருகே காடுவெட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே காடுவெட்டி, ரவவணயன்கோட்டகம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பால்குட திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி கடந்த 27-ந் தேதி நடந்தது. விழாவின் இரண்டாம் நாள் கோவில் அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மேளதாளங்கள் முழங்க அம்மன் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை காடுவெட்டி, ரவணயன்கோட்டகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story