தீவனூர்விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
தீவனூர் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனா்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 25-ந்தேதி கணபதி ஹோமம் நடந்து, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில், 7-ம் நாள் உற்சவத்தில் பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் பொய்யாமொழி விநாயகர் பிறை சந்திரனில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீதிஉலா வந்தார்.
அப்போது, பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story