மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவிலில் பால்குட விழா


மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவிலில் பால்குட விழா
x

மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவிலில் பால்குட விழா

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் கோடாபிஷேக பால்குட பெருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி 50-வது பொன்விழா ஆண்டான நேற்று பல்வேறு வாத்திய இசைகளுடன் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் புறப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். வீதிகள் தோறும் வழிநெடுக பால்குடம் எடுத்து வருபவர்களுக்கு தண்ணீர் ஊற்றியும் தீபாராதனை காட்டியும் வழிபட்டனர். இதில் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் எஸ். கே. குமரவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.கலியமூர்த்தி, டி.எஸ். செல்வராஜ், கீதா சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சுவாமிதுரை மற்றும் நந்தகுமார், செல்வமணி, சுந்தர், ரவி மற்றும் நாட்டாண்மைகளும் பலர் கலந்து கொண்டனர். இரவு அம்மன்களுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தயிர் பள்ளையம் போடப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் தேப்பெருமாநல்லூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story