பாபநாசம் சுந்தரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா


பாபநாசம் சுந்தரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
x

பாபநாசம் சுந்தரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள சுந்தர காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து வாணவேடிக்கை மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story