சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 3-வது வெள்ளியையொட்டி தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடி, கரகம் புறப்பட்டு தேர் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் இரட்டை காளியம்மனுக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதி உலா நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது.


Next Story