பிரதமர் மோடி வருகையால் தடை: முதுமலையில் 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


பிரதமர் மோடி வருகையால் தடை: முதுமலையில் 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

பிரதமர் மோடி வருகையால் தடை விதித்த நிலையில் முதுமலையில் 4 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி

கூடலூர்

பிரதமர் மோடி வருகையால் தடை விதித்த நிலையில் முதுமலையில் 4 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் காலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 22 கி.மீட்டர் வாகன சவாரி செய்து வனவிலங்குகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார்.

பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார். மேலும் யானைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து பாகன்கள், வன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய பாகன்கள், ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக பிரதமர் மோடி முதுமலைக்கு வருவதை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் அனுமதி

தொடர்ந்து முதுமலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டது. மேலும் வாகன சவாரியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பின்னர் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் முதுமலை புலிகள் காப்பகம் இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி முதுமலைக்கு வந்து விட்டு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் விடுதிகள், உணவகங்கள் திறக்கப்பட்டது.

மேலும் வாகன சவாரியும் தொடங்கியது. காலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் மாலை நேரத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்திருந்ததை காணமுடிந்தது.


Related Tags :
Next Story