ராமேசுவரம் கோவிலில் பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை


ராமேசுவரம் கோவிலில் பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நாடு முழுவதும் தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 25-ந் தேதி நடை திறப்பில் மாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25-ந் தேதி காலை வழக்கம் போல் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும். பகல் 1 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்று ரத வீதிகளில் வீதி உலா வந்த பின்னர் மீண்டும் மாலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பகல் 1 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவோ, கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிகாலை 5 மணி முதல் 1 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடை சாத்தப்படும் வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story