ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நீலகிரி , ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் , சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால், வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது , விலங்குகள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் , இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்து ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story