அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x

அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

ஈரோடு

ஈரோடு

அந்தியூர், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,508 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.40-க்கும், நேந்திரம் ரூ.46-க்கும் ஏலம் போனது. செவ்வாழை (தார்) ரூ.650-க்கும், ரஸ்தாளி ரூ.520-க்கும், மொந்தன் ரூ.420-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், ரொபஸ்டா ரூ.320-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, கோபி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.

கோபி

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 3 ஆயிரத்து 190 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.46-க்கும், நேந்திரன் ரூ.41-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.500-க்கும், தேன்வாழை ரூ.580-க்கும், பச்சை நாடன் ரூ.340-க்கும், மொந்தன் ரூ.390-க்கும், ரொபஸ்டா ரூ.410-க்கும், ரஸ்தாளி ரூ.510-க்கும், செவ்வாழை ரூ.730-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. தேங்காய் 3 ஆயிரத்து 740 கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 8 ரூபாய் முதல் 14 ரூபாய் 30 காசு என மொத்தம் 40 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாழைத்தார்கள் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.


Next Story