ஊட்டியில் வாழை இலை விலை அதிகரிப்பு


ஊட்டியில் வாழை இலை விலை அதிகரிப்பு
x

சுப நிகழ்ச்சிகள் காரணமாக ஊட்டியில் வாழை இலை விலை அதிகரித்து உள்ளது. ஒரு கட்டு ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி

ஊட்டி,

சுப நிகழ்ச்சிகள் காரணமாக ஊட்டியில் வாழை இலை விலை அதிகரித்து உள்ளது. ஒரு கட்டு ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுப நிகழ்ச்சிகள்

நடப்பு மாதத்தில் 1, 5, 7, 8, 9-ந் தேதிகள் முகூர்த்த நாட்களாகும். இன்று (திங்கட்கிழமை) முகூர்த்த நாள் என்பதால், நீலகிரி மாவட்டம் முழுவதும் திருமணம், புதுமனை புகுவிழா உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தொடர் சுப நிகழ்ச்சிகள் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. குறிப்பாக வாழை இலை விலை அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்து வாழை இலை வியாபாரி ஒருவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்திற்கு வாழை இலை கோவை மார்க்கெட்டுகள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மொத்தமாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 100 முழு இலைகள் கொண்ட ஒரு வாழை இலை கட்டு வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும். ஆனால், முகூர்த்தம், சுப நிகழ்ச்சிகள் காரணமாக கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகரிப்பு

தற்போது வரத்து அதிகரித்து இருப்பதால், 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வாழை இலை ஒன்று ரூ.6 முதல் ரூ.8 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் தக்காளி கிலோ ரூ.50, எலுமிச்சம்பழம் கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் சமவெளிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இதனால் விலைவாசி சற்று உயர்ந்து உள்ளது. இதேபோல் மல்லிகை உள்பட பூக்கள் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.


Next Story