வாழைத்தார் திருடியவர் கைது


வாழைத்தார் திருடியவர் கைது
x

விளாம்பட்டி அருகே வாழைத்தார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

விளாம்பட்டி அருகே உள்ள இ.ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் இளவரசு (வயது 33). இவருக்கு சொந்தமான தோட்டம், முத்துலிங்காபுரம் கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் நெல், வாழை ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மலைராஜன் (55). இவர், இளவரசின் தோட்டத்துக்கு சென்று வாழைத்தாரை வெட்டி திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற இளவரசு, மலைராஜனை கையும், களவுமாக பிடித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து, மலைராஜனை கைது செய்தார்.


Next Story