அந்தியூரில் வாழைத்தார் ரூ.6¼ லட்சத்துக்கு ஏலம்
அந்தியூரில் வாழைத்தார் ரூ.6¼ லட்சத்துக்கு ஏலம் போனது
ஈரோடு
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 250 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் நேந்திரம் (கிலோ) ரூ.20-க்கும், கதலி ரூ.35-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.750-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், தேன்வாழை ரூ.520-க்கும், ரஸ்தாளி ரூ.550-க்கும், ரொபஸ்டா ரூ.270-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 800-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன.
Related Tags :
Next Story