பாங்காக் சியாம் பல்கலைக்கழகம் பாராட்டு சான்றிதழ்


பாங்காக் சியாம் பல்கலைக்கழகம் பாராட்டு சான்றிதழ்
x

பாங்காக் சியாம் பல்கலைக்கழகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.

புதுக்கோட்டை

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சியாம் பல்கலைக்கழகத்தில் 26-வது உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாடு நடத்தப்பட்டது. சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஐ.நா நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 என்பது இம்மாநாட்டின் கருப்பொருள். உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் 'கடந்த கால தொற்றுநோயிலிருந்து எதிர்கால பாடங்கள் - கல்வியில் கலப்பு கற்றல்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபாரதன் ''சிறப்பான கல்வி அளித்தல்" என்ற பிரிவில் சிறந்தவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சியாம் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் போர்ஞ்சாய் மோங்கோன்வனிட் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தாய்லாந்தின் ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் தொழில் முனைவோர் பால் போர்ந்தெப் ஸ்ரீநருலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜேஸ் ஜி கொன்னூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story