சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்


சிதம்பரம்    அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்
x

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

கடலூர்

அண்ணாமலைநகர்,

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உதவி மற்றும் முன்னேற்ற மையமும், இந்தியன் வங்கியும் இணைந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாமை நடத்தியது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இதையடுத்து அரசின் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் பல்கலைக்கழக அறக்கட்டளைகள் மூலம் கிடைக்கும் உதவி தொகைகள் வங்கி மூலம் கிடைக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. முன்னதாக மாணவர் உதவி மற்றும் முன்னேற்றம் மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் கலைப்புல முதல்வர் விஜயராணி, வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் இயக்குனர் கிருஷ்ணசாமி, மொழியியல் துறை தலைவர் சரண்யா, இந்தி துறைத் தலைவர் காமகோடி, துணைவேந்தரின் செயலாளர் பாக்யராஜ், நோடல் அதிகாரி கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணினி துறை ஒருங்கிணைப்பாளர் காமராஜன் நன்றி கூறினார்.


Next Story